பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி மீதான கடத்தல் வழக்கை ரத்து செய்ய அரசு கடும் எதிர்ப்பு

பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி மீதான கடத்தல் வழக்கை ரத்து செய்ய அரசு கடும் எதிர்ப்பு

எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் கூடுதல் டிஜிபி ஜெயராமன் ஆகியோர் மீதான சிறுவன் கடத்தல் வழக்கை ரத்து செய்யக் கூடாது எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தங்களுக்குள் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி வழக்கை முடிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அரசு வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்தார். செல்வாக்கு மிக்க நபர்கள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளை ரத்து செய்வது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பின் வலுவான ஆட்சேபனையைத் தொடர்ந்து, மனுதாரர்கள் தங்கள் மனுவைத் திரும்பப் பெற்றனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தார். காதல் திருமண விவகாரத்தில் ஒரு சிறுவனைக் கடத்தியதாகப் பதியப்பட்ட இந்த வழக்கில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற முக்கியப் புள்ளிகளுக்கு இந்த உத்தரவு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *