புதுவை பெண்களுக்கு ரூ 5000 அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ஆளுநர்
March 9, 2026

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிவப்பு ரேஷன் அட்டை வைத்துள்ள சுமார் 63 ஆயிரம் பெண்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கான உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்க ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால் தலா 2500 ரூபாய் வீதம் மொத்தம் 5000 ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கையை ஏற்று எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை புதுச்சேரி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.