புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனு தாக்கல் முதல் நாளில் ஒருவர்கூட வரவில்லை
March 16, 2026

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. துணை ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட மூன்று மையங்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தும் வேட்பாளர்கள் வராதது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் 23-ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசம் உள்ள நிலையில், தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான பரிசீலனை 24-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.