பீகார் சட்டப்பேரவைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு
March 13, 2026

பீகார் சட்டப்பேரவைக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் பிரேம் குமார், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும், தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி-யிடம் நிலைமையை விளக்கி, வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.
வருகின்ற மார்ச் 16-ஆம் தேதி சட்டப்பேரவை வளாகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் விடுக்கப்பட்டுள்ள மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.