பிரியங்காவுடன் மோதல் ராகுல் காந்தி வெளிநாடு பயணம்
December 18, 2025

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியின் பேச்சிற்கு கிடைத்த வரவேற்பால் அதிருப்தியடைந்த ராகுல் காந்தி, தனது சகோதரியுடன் ஏற்பட்ட மோதலால் ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா காங்கிரஸ் இப்போது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ளதாக விமர்சித்துள்ளார். இதற்கிடையில், மல்லிகார்ஜுன கார்கேவை நீக்கிவிட்டு பிரியங்கா காந்தியிடம் பொறுப்பை ஒப்படைக்கக் கோரி ஒடிசா மூத்த தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது கட்சிக்குள் தலைமைத்துவ நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது.