பிரபல நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார்!
May 2, 2025

மலையாள சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்த விஷ்ணு பிரசாத் காலமானார். கல்லீரல் பாதிப்பால் எர்ணாகுளத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழில் ‘காசி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ரன்வே, மாம்பழக்காலம், லயன், பென் ஜான்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.