பிஎம் கிசான் திட்டத்தின் 22வது தவணைத் தொகையைப் பெற விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பிஎம் கிசான் திட்டத்தின் 22வது தவணைத் தொகையைப் பெற விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 22வது தவணையாக 2000 ரூபாய் நிதியுதவி பெற லட்சக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். மார்ச் 13 அன்று பிரதமர் நரேந்திர மோடியின் அசாம் விஜயத்தின் போது, இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

இருப்பினும், இ-கேஒய்சி (e-KYC) முடிக்காதவர்கள் அல்லது நில ஆவணங்களில் குளறுபடி உள்ளவர்களுக்கு இந்தத் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது. எனவே, விவசாயிகள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் ஆதார் இணைப்பு மற்றும் இ-கேஒய்சி நிலையைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே வங்கி கணக்கிற்குப் பணம் வந்து சேரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *