பாப் எல் மாண்டேப் ஜலசந்தியில் பதற்றம் அதிகரிப்பால் உலக வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்

பாப் எல் மாண்டேப் ஜலசந்தியில் பதற்றம் அதிகரிப்பால் உலக வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பாப் எல் மாண்டேப் கடல்வழிப் பாதையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏமனின் ஹூதி அமைப்பினர் இந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளதால், சர்வதேச சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் அதிகரித்தால் இந்த முக்கிய கடல்வழி மூடப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலக வர்த்தகத்தில் சுமார் 12 சதவீத பொருட்கள் மற்றும் எரிபொருள் இந்த வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பாதை முடங்கினால் கப்பல்கள் ஆப்பிரிக்காவை சுற்றி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும், இது கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும். இந்த பூகோள அரசியல் மோதல் தற்போது உலகளாவிய விநியோகச் சங்கிலி மற்றும் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *