பழைய வாகனங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பழைய வாகனங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி-என்சிஆர் பகுதியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் குறைக்க உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இனி வாகனங்களின் வயதைக் கணக்கில் கொள்ளாமல், அவற்றின் புகை உமிழ்வு தரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பிஎஸ்-4 (BS-IV) தரத்திற்குக் குறைவான வாகனங்கள் மீது மட்டுமே இனி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் மாசுபாட்டிற்கு முக்கியக் காரணம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கட்டுமானத் தடைகளால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களின் வங்கித் கணக்குகளில் நேரடியாக நிதியுதவி வழங்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *