பழனிசாமியின் தூக்கத்தை கெடுத்த ஸ்டாலினின் மகளிர் உரிமைத் தொகை மாஸ்டர்ஸ்ட்ரோக்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களுக்கு 5,000 ரூபாய் வழங்கியதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் பதிலடி கொடுத்துள்ளார். ஒன்றிய அரசின் முட்டுக்கட்டைகளை முறியடிக்கவே இந்த தொகை முன்கூட்டியே வழங்கப்பட்டதாக அவர் விளக்கினார். இது அதிமுகவின் அழுத்தத்தால் நடந்ததல்ல, மாறாக திராவிட மாடல் அரசின் மக்கள் நலனுக்கான அதிரடி நடவடிக்கை என்று முதல்வர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் தற்போது உரிமை கொண்டாடுவது அவர்களின் இயலாமையையே காட்டுகிறது என்று ஸ்டாலின் விமர்சித்தார். இந்த ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் தூக்கத்தை கெடுத்துவிட்டதாகவும், திமுகவின் மகளிர் சக்திக்கு முன்னால் பழனிசாமியின் அரசியல் எடுபடாது என்றும் அவர் சாடினார். பெண்களுக்கான இந்த நிதி உதவி தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.