பல்லாவரத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை

சென்னை அடுத்த திரிசூலம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருந்தபோது புகுந்த கும்பல் இருவரையும் ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் சென்னை புறநகர் பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்தப் பழிவாங்கும் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.