பதிவுத் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயம் எனும் அதிரடி சட்டத்திருத்தம்
February 23, 2026

குஜராத்தில் லவ் ஜிஹாத் மற்றும் ஏமாற்றுத் திருமணங்களைத் தடுக்க பதிவுத் திருமண முறையை மாநில அரசு அதிரடியாக மாற்றியுள்ளது. இனிமேல் பதிவுத் திருமணம் செய்வதற்கு மணமக்களின் பெற்றோரது சம்மதம் மற்றும் ஆதார் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அறிவித்துள்ளார்.
இந்த சட்டத்திருத்தத்தின்படி விண்ணப்பம் செய்த 30 நாட்களுக்குள் பெற்றோரிடம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே திருமணம் அங்கீகரிக்கப்படும். இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர். பொதுமக்களின் கருத்துகளைப் பெற்ற பின்னரே இது நடைமுறைக்கு வரும்.