நேபாள ஆன்மீக பயணத்தில் நேர்ந்த கோர விபத்து மூன்று தமிழர்கள் உயிரிழந்த சோகம்
March 15, 2026

பொள்ளாச்சியைச் சேர்ந்த முத்துக்குமார், அவரது மனைவி மீனா மற்றும் நண்பர் பாபு ஆகியோர் நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற மனகாமனா கோவிலை தரிசித்துவிட்டு திரும்பும்போது நிகழ்ந்த கோர விபத்தில் பலியாகினர். கடந்த 7-ம் தேதி ஆன்மீகச் சுற்றுப்பயணம் சென்ற இவர்களது வாகனம், காந்தர் மலைப்பகுதியில் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 14 பேரில் பொள்ளாச்சியைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த துயர சம்பவம் பொள்ளாச்சி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.