நேபாளத்தில் பயங்கரம் பள்ளத்தில் பாய்ந்த பேருந்து ஏழு இந்தியர்கள் பரிதாப பலி
March 15, 2026

நேபாளத்தின் ஷாஹித் லகான் கிராமம் அருகே மலைப்பாதையில் சென்ற பேருந்து சுமார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காத்மாண்டுவிற்கு மேற்கே நிகழ்ந்த இந்த கோர விபத்தில் கோயிலுக்குச் சென்று திரும்பிய இந்தியர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நேபாளத்தில் முறையற்ற சாலை பராமரிப்பு மற்றும் வாகனங்களின் மோசமான நிலை காரணமாக இதுபோன்ற தொடர் விபத்துகள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.