நேபாளத்தின் மிக இளம் வயது பிரதமராக பாலேந்திர ஷா வரலாற்று சாதனை

நேபாளத்தின் மிக இளம் வயது பிரதமராக பாலேந்திர ஷா வரலாற்று சாதனை

நேபாளத்தின் புதிய பிரதமராக 35 வயதேயான பாலேந்திர ஷா பொறுப்பேற்று உலகையே வியக்க வைத்துள்ளார். கடந்த ஆண்டு கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய சுதந்திரக் கட்சி மொத்தமுள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. ஜாபா-5 தொகுதியில் முன்னாள் பிரதமரை விட 49,614 வாக்குகள் அதிகம் பெற்று அவர் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

நேபாளத்தின் இளம் பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேந்திர ஷாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும், இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *