நெல் கொள்முதலில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு இலக்கை உயர்த்தக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
March 14, 2026

தமிழ்நாட்டில் நடப்பு கரீப் பருவத்தில் நெல் சாகுபடி மற்றும் கொள்முதல் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் இலக்கை 23.50 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதாலும், சாதகமான தட்பவெப்ப நிலையாலும் விளைச்சல் அதிகரித்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், கொள்முதல் பணிகளை தடையின்றி தொடரவும், அரிசி கொள்முதல் இலக்கை 32 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தி ஆணையிட வேண்டும் என அவர் அக்கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.