நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கணவன்

நெல்லை பேருந்து நிலையத்தில் மனைவியை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கணவன்

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாழையூத்து பகுதியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் பேச்சியம்மாள் தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்து நிலையத்திற்கு வந்த மனைவியை சுதாகர் அரிவாளால் கொடூரமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த பயங்கர கொலைக்கு பிறகு சுதாகர் தானாகவே காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். நெல்லை சந்திப்பு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடத்தில் நடந்த இந்த படுகொலை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *