நிச்சயதார்த்தம் முறிந்த ஆத்திரத்தில் வருங்கால மனைவிக்கு எச்ஐவி ஊசி செலுத்திய கொடூரன்

நிச்சயதார்த்தம் முறிந்த ஆத்திரத்தில் வருங்கால மனைவிக்கு எச்ஐவி ஊசி செலுத்திய கொடூரன்

ஹைதராபாத்தில் தனது திருமணத்தை நிறுத்தியதற்காக, 22 வயது இளம்பெண்ணுக்கு 24 வயது இளைஞர் ஒருவர் எச்ஐவி தொற்றுள்ள ஊசியைச் செலுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த இளைஞருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிந்ததால், பெண்ணின் வீட்டார் திருமணத்தை ரத்து செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், கடந்த மார்ச் 11 அன்று இளம்பெண்ணைத் தாக்கி பழிவாங்கும் நோக்கில் இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய அந்த இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வேண்டுமென்றே நோய்த்தொற்றைப் பரப்புவது கடுமையான குற்றமாகும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆந்திராவின் கர்னூலிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்த நிலையில், இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *