நாணயத் தாள் அச்சிடுவதில் இந்தியாவுக்கு அதிர்ச்சி: அண்டை நாடுகளைக் கவர்ந்த சீனாவின் தொழில்நுட்பமும், குறைந்த விலையும்!

நாணயத் தாள் அச்சிடுவதில் இந்தியாவுக்கு அதிர்ச்சி: அண்டை நாடுகளைக் கவர்ந்த சீனாவின் தொழில்நுட்பமும், குறைந்த விலையும்!

ஒரு காலத்தில் இந்தியாவை மட்டுமே நம்பியிருந்த நேபாளம், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பல அண்டை நாடுகள், இப்போது தங்கள் நாட்டு பணத்தாள்களை அச்சிடுவதற்காக சீனாவை நாடிச் செல்கின்றன. இந்த வங்கிப் பணத்தாள் அச்சிடும் துறையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிந்து, சீனா மையமாகி வருகிறது. சமீபத்தில், நேபாளம் தனது புதிய ₹1000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் அரச நிறுவனமான China Banknote Printing and Minting Corporation (CBPMC)-க்கு அளித்துள்ளது, இதன் மதிப்பு சுமார் 16.985 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

நேபாளத்தின் இந்த முடிவுக்குப் பின்னால் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளன. உலகளாவிய டெண்டரில் சீனாவின் மிகக் குறைந்த விலை மற்றும் மேம்பட்ட அச்சிடும் தொழில்நுட்பம் ஒரு முக்கிய பொருளாதாரக் காரணியாகும். மேலும், லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா போன்ற சர்ச்சைக்குரிய பகுதிகளை புதிய பணத்தாளில் நேபாளம் தங்கள் வரைபடத்தில் சேர்த்ததால், இந்திய அரசு பணத்தாள்களை அச்சிட தயக்கம் காட்டியது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சீனா தற்போது பங்களாதேஷ், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கும் அச்சிடும் சேவைகளை வழங்கி, ஆசியாவின் முக்கிய அச்சிடும் மையமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *