நவீன கால காதலை சொல்ல வரும் நீ ஃபாரெவர் மார்ச் 27 முதல் திரையரங்குகளில் வெளியீடு

நவீன கால காதலை சொல்ல வரும் நீ ஃபாரெவர் மார்ச் 27 முதல் திரையரங்குகளில் வெளியீடு

இன்றைய ஜெனரேஷன் இசட் தலைமுறையினரின் காதல் மற்றும் டேட்டிங் கலாச்சாரத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘நீ ஃபாரெவர்’ திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குனர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், நவீன கால காதலில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் நகைச்சுவை கலந்த காதல் காவியமாக விவரிக்கிறது. இதில் சுதர்ஷன் கோவிந்த் மற்றும் அர்ச்சனா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னை மற்றும் பொள்ளாச்சியின் முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ஜென் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் கைப்பற்றியுள்ளது. ஒய் ஜி மகேந்திரன் மற்றும் நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இத்திரைப்படம் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *