தோல்வி பயத்தில் அதிமுகவினர் இப்போதே காரணங்களை தேடுகிறார்கள் ஆர் எஸ் பாரதி விளாசல்
March 16, 2026

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக மீது அதிமுக சுமத்திய புகார்களை ஆர்.எஸ்.பாரதி முற்றிலுமாக மறுத்துள்ளார். தோல்வி உறுதி என்பதை உணர்ந்தே அதிமுகவினர் இதுபோன்ற கற்பனையான குற்றச்சாட்டுகளை இப்போதே அடுக்கத் தொடங்கிவிட்டதாக அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்திடம் திமுக முன்வைத்துள்ள கோரிக்கையில், மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த கோரிக்கையை ஆணையம் ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார். அனைத்து மறைந்த தலைவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.