தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசைவார்த்தை கூறி மருத்துவ மாணவியை சீரழித்த அரசு மருத்துவர் கைது
March 16, 2026

உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் வடமாநில மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஓம் பிரகாஷ் என்ற அரசு மருத்துவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தேர்வில் தேர்ச்சி பெற உதவுவதாக கூறி மாணவியை தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்ற அந்த மருத்துவர், மது போதையில் இக்கோரச் செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் உறுதியானது.
சத்தம் கேட்டு வந்த விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். ஏற்கனவே இருமுறை திருமணமாகி மனைவிகளை பிரிந்து வாழும் இந்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சக மருத்துவ மாணவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.