தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும் என உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவை பாஜக விழுங்கி துப்பிவிடும் என உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்

திருப்பத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜக மற்றும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடினார். மத்திய முகமைகளை வைத்து மிரட்டியே அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். பீகாரில் நிதிஷ்குமாருக்கே இந்த நிலைமை என்றால், எடப்பாடி பழனிசாமியின் நிலை என்னவாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவை எதிர்க்கும் தைரியம் திமுக தலைவருக்கு மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இபிஎஸ் ஒரு அடிமையாகச் செயல்படுவதாக விமர்சித்தார். பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழகம் வருவதாகவும், நிதி எதுவும் வழங்குவதில்லை என்றும் அவர் கூறினார். வரும் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *