தேர்தல் தேதி அறிவிப்பின் போது தலைமை தேர்தல் ஆணையர் தேனி வருசநாடு பற்றி பேசிய சுவாரசியமான காரணம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாகவும், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்த அறிவிப்பின் போது தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதி குறித்து ஆணையர் குறிப்பிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அங்குள்ள வெள்ளிமலை பகுதியில் வெறும் 5 வாக்காளர்களுக்காக பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இதற்காக தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்றும் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.