துருப்பிடித்த குழாய் தண்ணீர் புற்றுநோயை உண்டாக்கும் அபாயம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை
February 24, 2026

பழைய துருப்பிடித்த இரும்பு குழாய்கள் மூலம் வரும் குடிநீர் உயிருக்கு ஆபத்தான புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். குழாய்களில் உள்ள துரு மற்றும் நீரை சுத்திகரிக்கும் கிருமிநாசினிகள் வினையாற்றுவதால் புற்றுநோயை உருவாக்கும் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் உருவாவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ரோஸ்மேரி போர்ன்ஸ் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஹைசோவ் லியு இந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். எனவே பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி துருப்பிடித்த குழாய் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.