துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதலால் பயங்கர தீ விபத்து மற்றும் விமான சேவைகள் ரத்து

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதலால் பயங்கர தீ விபத்து மற்றும் விமான சேவைகள் ரத்து

துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலால் எண்ணெய் சேமிப்பு கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் தனது பயணிகளைப் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவிருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் திகைப்பில் உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *