துபாய் மற்றும் ஃபுஜைராவில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரிப்பு

ஈரானின் கார்க் தீவு எண்ணெய் முனையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் ஃபுஜைரா பகுதிகளில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா அமீரகத்தின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்தியதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது. இதில் ஃபுஜைரா எண்ணெய் முனையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 1800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ள நிலையில், அமீரக அரசு அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இருப்பினும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை என அமீரக அதிபர் எச்சரித்துள்ளார்.