திருவாரூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை அதிரடியாக தொடங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
March 27, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளைக் கைப்பற்றும் இலக்குடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2-ம் தேதி திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இதற்காக மெகா கூட்டணியை அமைத்துள்ள அவர், இன்னும் ஓரிரு நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார்.
தொடர்ந்து ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் முதலமைச்சர், தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 21-ம் தேதி கொளத்தூரில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இந்த அதிரடிப் பிரச்சாரம் திமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.