திருமண மேடையில் மணமகனுக்கு வந்த அந்த ஒரு மெசேஜ் தாலிக் கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை

ஜார்கண்ட் மாநிலம் கிரீடியில் நடந்த ஒரு திருமண விழாவில் அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்து மணமகன் மணமகளுக்கு குங்குமம் இடவிருந்த தருணத்தில், அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் மணமகள் ஏற்கனவே ஒருவருடன் காதலில் இருந்ததாகவும், அவரது காதலர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மணமகன் மிகுந்த அதிர்ச்சியடைந்து, யாரிடமும் சொல்லாமல் திருமண மேடையை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
மணமகன் மாயமானதை அறிந்த இரு குடும்பத்தாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு திருமண மண்டபமே ரணகளமானது. தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மணமகளின் முன்னாள் காதலர் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.