திருமணத்திற்கு ஒரு நாள் முன் காதலனுடன் தற்கொலை! மோரேனாவில் அதிர்ச்சி சம்பவம்

மத்தியப் பிரதேசத்தின் மோரேனா மாவட்டத்தில் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு 19 வயதுடைய பெண் ஒருவர் தனது 22 வயது காதலனுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவிருந்த திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன், கிராமத்திற்குப் பின்னால் இருந்த ஒரு மரத்தில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு இந்த காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
காவல்துறையின் தகவலின்படி, இருவரும் உறவினர்களாக இருந்ததால் அவர்களது காதலை குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர், இதனால் பெண்ணின் தந்தை அவருக்கு வேறு இடத்தில் வலுக்கட்டாயமாக திருமணம் நிச்சயித்தார். இதனால் கோபமடைந்த காதலர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் விசாரணை தொடரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.