திமுக கூட்டணியில் முதல் விக்கெட் விழுகிறதா அதிருப்தியில் வேல்முருகன் எடுக்கப்போகும் அதிரடி முடிவு

திமுக கூட்டணியில் முதல் விக்கெட் விழுகிறதா அதிருப்தியில் வேல்முருகன் எடுக்கப்போகும் அதிரடி முடிவு

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன்மொழிவு வந்ததாலும், அதையும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட திமுக வலியுறுத்துவதாலும் பண்ருட்டி வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

கூடுதல் தொகுதிகள் வழங்கப்படாத பட்சத்தில் வேல்முருகன் திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைக்க திமுக தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில், இந்தத் தொகுதிப் பங்கீட்டு விவகாரம் தற்பொழுது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *