திமுக கூட்டணியில் தேமுதிக வருகையால் அதிருப்தியா பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பதில்

திமுக கூட்டணியில் தேமுதிக வருகையால் அதிருப்தியா பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பதில்

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் மற்ற கட்சிகளிடையே எந்தவித சலசலப்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். வரும் தேர்தலில் இந்த கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார். பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் போட்டியிட வேண்டும் என்பது நிர்வாகிகளின் விருப்பமாக உள்ள நிலையில், கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளில் களம் காண தேமுதிக திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *