திமுக கூட்டணியில் இணைந்த பழைய எதிரிகள் அரசியலில் எதுவும் சாத்தியமே

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்பதை திமுக கூட்டணி நிரூபித்துள்ளது. ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்த கமல் ஹாசன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைகோ போன்றவர்கள் இன்று ஒரே அணியில் கைகோர்த்துள்ளனர். கொள்கை ரீதியாக முரண்பட்டாலும், தேர்தல் வெற்றிக்காக பழைய கசப்புகளை மறந்து இவர்கள் இணைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய மகேந்திரன் மற்றும் மதிமுகவில் இருந்து பிரிந்த மல்லை சத்யா ஆகியோர் இப்போது திமுக ஆதரவு நிலையில் உள்ளனர். ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற கவுண்டமணியின் வசனத்தைப் போல, தர்மசங்கடமான சூழல்களைக் கடந்து இந்த மெகா கூட்டணி தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த வியூகம் வாக்காளர்களிடம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியும்.