திமுக ஆட்சி இல்லையென்றால் தமிழ்நாடு அழிந்துவிடும் என நடிகர் வடிவேலு ஆவேச பேச்சு

திமுக ஆட்சி இல்லையென்றால் தமிழ்நாடு அழிந்துவிடும் என நடிகர் வடிவேலு ஆவேச பேச்சு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு, தமிழகத்திற்கு ஸ்டாலின் போன்ற ஒரு தலைவர் கிடைப்பது கடினம் என புகழாரம் சூட்டினார். எந்தவொரு நெருக்கடியையும் எதிர்கொள்ளும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட ஒரே தலைவர் அவர்தான் என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சி மட்டும் இல்லையென்றால் தமிழகத்தின் பெயரே காணாமல் போய்விடும் என்றும், மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *