தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கிறது நாளை சென்னை வரும் பியூஷ் கோயல் முன்னிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகுமா
March 18, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். இதற்கு முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மார்ச் ۲۰-ஆம் தேதி அதிமுக மற்றும் பாஜக இடையே அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேளச்சேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட முக்கியத் தொகுதிகள் உட்பட மொத்தம் ۳۰ இடங்களை பாஜக கோரியுள்ள நிலையில், மார்ச் ۳۰-இல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்குள் இந்த வார இறுதியில் கூட்டணிக் கணக்குகள் முழுமையாக இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.