தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம் மம்தா பானர்ஜி விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை
March 10, 2026

தமிழகத்தில் இருந்து மாற்றப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஸ்டாலின் அரசைத் துன்புறுத்தியது போல இங்கு செயல்பட முடியாது என எச்சரித்த அவர், ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆர்.என். ரவியை பாஜக தொண்டர் என்றும் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் காஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் புதிய முன்பதிவு முறையினால் மக்கள் சந்திக்கும் இன்னல்களை மம்தா சுட்டிக்காட்டினார். அதேவேளையில், மாநிலத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ₹1,500 வழங்கும் ‘பாங்லார் யுவ சாத்தி’ திட்டத்தின் சிறப்பம்சங்களையும், அது பொதுமக்களுக்கு வழங்கும் நிதியுதவி குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.