தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளதாக உள்துறை செயலாளர் அதிரடி விளக்கம்
March 12, 2026

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கடந்த 2021 ஆம் ஆண்டு 422 ஆக இருந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் 401 ஆகக் குறைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.
காவல் மரணங்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், இது போன்ற சம்பவங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி புகார்களை அளிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர்கள், காவல் நிலையங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டனர்.