தந்தையின் கள்ளக்காதலை பார்த்த ஒன்பது வயது சிறுமி கொடூர கொலை

தந்தையின் கள்ளக்காதலை பார்த்த ஒன்பது வயது சிறுமி கொடூர கொலை

ஆந்திர மாநிலம் மார்க்காபுரம் மாவட்டத்தில் தனது ஒன்பது வயது மகள் துளசி வந்தனாவை கொலை செய்த தந்தை சிவா ரெட்டி மற்றும் அவரது காதலி பாஜூபீ ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தந்தையின் திருமணத்தை மீறிய உறவை சிறுமி கண்டுபிடித்ததால், ரகசியம் வெளியே தெரிந்துவிடும் என்ற பயத்தில் இருவரும் சேர்ந்து சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் பற்றி அறிந்த கிராம மக்கள் ஆத்திரமடைந்து, குற்றவாளியான சிவா ரெட்டியை செருப்பால் அடித்து போலீசில் ஒப்படைத்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *