தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றம்! நகைக்கடன் 115% அதிகரிப்பு ஏன் தெரியுமா?

மூன்று நாள் வீழ்ச்சிக்குப் பிறகு, டெல்லி சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. திருமணப் பருவத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை ரூ.3,500 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,28,900-ஐ எட்டியது. அதேசமயம் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,800 அதிகரித்து ரூ.1,60,800-ஆக உள்ளது. உள்நாட்டு நகை விற்பனையாளர்களின் கொள்முதல் மற்றும் உலகளாவிய சந்தையில் அமெரிக்க டாலரின் பலவீனமே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நவம்பர் மாத அறிக்கையின்படி, நாட்டில் நகை அடமானக் கடன் (Gold Loan) கணிசமாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 2025 நிலவரப்படி, இந்த வகை கடன் கடந்த ஆண்டை விட 114.88% அதிகரித்து ரூ.3,16,042 கோடியாக உள்ளது. பெடரல் ரிசர்வ் வங்கியின் மென்மையான கருத்துக்களால் வட்டி விகிதக் குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்ததே தங்கத்தின் விலை உயர்வுக்கு மற்றொரு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.