டீப்ஃபேக் அச்சுறுத்தல்: மத்திய அரசு அதிரடி – 3 மணிநேரத்தில் போஸ்ட்களை நீக்க உத்தரவு!

டீப்ஃபேக் அச்சுறுத்தல்: மத்திய அரசு அதிரடி – 3 மணிநேரத்தில் போஸ்ட்களை நீக்க உத்தரவு!

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைத் தடுக்க, டிஜிட்டல் தளங்களுக்கான புதிய மற்றும் கடுமையான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கு (Content) ‘AI-generated’ என்ற லேபிளை ஒட்டுவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, ஆபாசமான அல்லது சட்டவிரோதமான பதிவுகளை நீக்குவதற்கு வழங்கப்பட்ட 36 மணிநேர கால அவகாசம், தற்போது வெறும் 3 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த புதிய விதிகள், வரும் பிப்ரவரி 20 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

புதிய விதிகளின் சிறப்பம்சங்கள்:

  • மெட்டாடேட்டா கட்டாயம்: AI மூலம் உருவாக்கப்பட்ட ஆடியோ அல்லது வீடியோவின் மூலத்தைக் கண்டறிய நிரந்தர மெட்டாடேட்டாவைப் பயன்படுத்த வேண்டும்.
  • பயனர் பொறுப்பு: உள்ளடக்கத்தைப் பதிவேற்றும் போது அதன் உண்மைத்தன்மை குறித்து பயனர் உறுதிப்படுத்த வேண்டும்.
  • கடும் நடவடிக்கை: இந்த விதிகளைப் பின்பற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *