டிரம்ப் வரி திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை விதித்ததால் இந்தியா அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்
February 23, 2026

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான முக்கியமான இடைக்கால வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வாஷிங்டனில் பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெறவிருந்த பிரதிநிதிகள் கூட்டத்தை இரு நாடுகளும் ஒத்திவைத்துள்ளன. தற்போதைய சர்வதேச சூழல் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இறக்குமதி வரி உயர்வு தொடர்பான அதிபர் டிரம்பின் முடிவுக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வரிகளை உயர்த்துவது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த அதிரடி தீர்ப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு விதிக்கப்படவிருந்த கூடுதல் வரி சுமை குறைய வாய்ப்புள்ளது.