டிரம்பின் பிடிவாதமான வரி விதிப்பால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை திடீர் ரத்து
February 23, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வர்த்தக வரிகள் சட்டவிரோதம் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவை மீறி டிரம்ப் தொடர்ந்து புதிய வரிகளை விதித்து வருவதால், இன்று தொடங்கவிருந்த இந்தியா-அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையற்ற சூழலை ஆய்வு செய்ய இரு நாடுகளும் அவகாசம் கேட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமையில் நடைபெறவிருந்த இந்தப் பேச்சுவார்த்தை, டிரம்பின் தன்னிச்சையான முடிவுகளால் தடைபட்டுள்ளது. இரு நாடுகளும் ஆலோசித்த பிறகு அடுத்த கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.