ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது தமிழக தேர்தல் தேதிகள் குறித்த அதிரடி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது தமிழக தேர்தல் தேதிகள் குறித்த அதிரடி அறிவிப்பு

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக தயாராகி வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஏற்கனவே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த பிரம்மாண்ட ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற 3.45 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *