ஜோதிடரின் ரகசிய ஆலோசனையால் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் அதிரடி முடிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் வியூகங்களை அதிரடியாக மாற்றி வருகிறார். தொடர் தோல்விகள் மற்றும் உட்கட்சிப் பூசல்களால் சோர்ந்துள்ள அவர், தற்போது ஜோதிடர்களின் ஆலோசனையின்படி கட்சியின் ஆட்சி மன்றக் குழு மற்றும் தேர்தல் பணிக் குழுக்களில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார். கிரக நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணியை எதிர்கொள்ள கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் தலைமையில் தொகுதி பங்கீடு மற்றும் பிரச்சாரக் குழுக்களை அவர் அமைத்துள்ளார். கண்டக சனியின் தாக்கம் இருப்பதாக ஜோதிடர்கள் எச்சரித்துள்ள நிலையில், அவர்களின் வழிகாட்டுதலின்படி எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் இந்த புதிய மாற்றங்கள் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.