ஜி7 கூட்டத்தில் ஜெய்சங்கர் விடுத்த அதிரடி கோரிக்கை உலக நாடுகளின் கவனம் இந்தியா பக்கம் திரும்புமா

பிரான்சில் நடைபெற்ற ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக வளரும் நாடுகளின் கவலைகளை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற அவர், உலகளாவிய நிர்வாக முறையில் மாற்றம் தேவை என்பதை உரக்கச் சொன்னார்.
ஈரான் ஹோமுஸ் ஜலசந்தியை மூடியதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு மற்றும் தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தினர். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, கப்பல் போக்குவரத்தை சீரமைக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்று ஜெய்சங்கர் அங்கு தெரிவித்தார்.