ஜான்சியில் 18 லட்சம் மதிப்பிலான கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரி மர்மமான முறையில் கடத்தல்
March 11, 2026

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்குச் சொந்தமான 524 சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் சென்ற லாரி மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோலி பண்டிகை விடுமுறையின் போது ஆலையின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த லாரி மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது.
சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிலிண்டர்கள் காணாமல் போன நிலையில், ஜிபிஎஸ் கருவி உடைக்கப்பட்ட லாரி மட்டும் தனியாக மீட்கப்பட்டது. லாரி உரிமையாளர் நீரஜ் அகர்வால் அளித்த புகாரின் பேரில் சிப்ரி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.