சென்னையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் பரிதாப பலி

சென்னையில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து விழுந்து இரண்டு குழந்தைகள் பரிதாப பலி

சென்னை நாவலூர் அருகே உள்ள சாமுண்டீஸ்வரி நகரில் இன்று காலை திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து கோர விபத்து நிகழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் ஒன்றரை வயது மற்றும் நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெடி விபத்தின் தாக்கத்தால் மூன்று வீடுகள் பலத்த சேதமடைந்தன. இதில் ஏழு வயது சிறுவன் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *