சென்னையில் அதிகாலை சிலிண்டர் வெடித்து சிதறியதில் இரண்டு பிஞ்சுகள் பரிதாப பலி

சென்னையில் அதிகாலை சிலிண்டர் வெடித்து சிதறியதில் இரண்டு பிஞ்சுகள் பரிதாப பலி

செங்கல்பட்டு நாவலூர் பகுதியில் அதிகாலை மக்கள் உறக்கத்தில் இருந்தபோது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒன்றரை வயது சிறுவன் தீரன் மற்றும் 4 வயது சிறுமி கிரீஷிகா ஆகிய இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்த சஞ்சய், சோனியா உள்ளிட்ட நால்வர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எரிவாயு கசிவு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *