சுப்மன் கில் பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேடுகிறாரா ரிதிமா பண்டிட் அதிரடி பதில்

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் நடிகை ரிதிமா பண்டிட் காதலிப்பதாக பரவிய வதந்திகளுக்கு நடிகை முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், புகழ் மற்றும் பணத்திற்காக கிரிக்கெட் வீரரின் பெயரை பயன்படுத்துவதாக எழுந்த புகார்களை கடுமையாக மறுத்தார். தான் இன்று இருக்கும் நிலையை அடைய பல வருடங்கள் கடினமாக உழைத்துள்ளதாகவும், தனது அடையாளத்தை நிரூபிக்க யாருடைய பெயரும் தேவையில்லை என்றும் அவர் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
தவறான செய்திகள் மூலம் மலிவான விளம்பரத்தை தான் ஒருபோதும் விரும்புவதில்லை என்று ரிதிமா விளக்கமளித்துள்ளார். முன்னதாக சுப்மன் கில்லுடன் தனக்கு திருமணம் என பரவிய செய்திகளை அவர் ஏற்கனவே மறுத்திருந்தார். தேவையற்ற வதந்திகளால் மக்கள் உற்சாகமடைவதை சுட்டிக்காட்டிய அவர், தனது சொந்த உழைப்பின் மீதே தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். தற்போது தனது திரைப்பயணத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.