சிவகாசியில் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் நகைக்காக உயிரை பறித்த முன்னாள் தோழி

சிவகாசியில் மூதாட்டி கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் நகைக்காக உயிரை பறித்த முன்னாள் தோழி

சிவகாசி அருகே தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியை தாயாரம்மாள் மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் இயற்கை மரணம் என்று கருதப்பட்ட நிலையில், இறுதிச் சடங்கின் போது அவரது 5 சவரன் தங்க நகைகள் மாயமானதால் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் மூச்சுத்திணறி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் தாயாரம்மாளின் முன்னாள் தோழி ஜமுனா, கடன் தொல்லையால் இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்தது. கடந்த 10-ஆம் தேதி இரவு மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற ஜமுனா, நள்ளிரவில் அவரை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பியோடியுள்ளார். தலைமறைவாக இருந்த ஜமுனாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *